மரம் கவிதை
மரம் மரமாய் இந்த மனிதருக்கு மத்தியில் மரமாகவே வளர்ந்தேன் நான் கடவுளே ஆனாலும் தாயின் கருவறை எச்சத்தின் வழியே தான் பிறக்க வேண்டும் நானும் கூட பறவையின் எச்சத்தின் வழியே பிறந்தேன் அவமானம் இல்லை புத்தனுக்கு மரத்தடியில்தான் ஞானம் கிடைத்தது அத்திமரம் துளிர்க்கும் போது தான் மீண்டும் வருவேன் என்றார் இயேசு என்னை வைத்தவருக்கும் வைதவனுக்கும் வெயிலிலே நிழலை கொடுத்தேன் எத்தனை பறவைகளுக்கு வீடு கட்டிக் கொள்ள இடம் கொடுத்தேன் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொள்ள விழுது கொடுத்தேன் மனிதன் சுவாசிக்க கார்பன்-டை-ஆக்சைடை பிராணவாயுவாய் மாற்றிக் கொடுத்தேன் மழை காலங்களில் ஒதுங்கி நிற்க குடையாய் என்னை கொடுத்தேன் இத்தனை உனக்கு கொடுத்த எனக்கு என்னில் ஆணி அடித்து, காயப்படுத்துகிறாய் கிளையை வெட்டி விரகாய் எரிக்கின்றாய் புகைப்பிடித்து அணைக்க என்னில் தேய்க்கின்றாய் எத்தனை அன்பு என் மீது உனக்கு எத்தனை கைமாறு எனக்கு ...
Comments
Post a Comment