ஓடாத நதி

மேக தாதுவை கட்ட விடு
மேகத்தையும் தூது விடு
மானங்கெட்டு மறந்துவிடு
மரணத்தையும் இழிச்ச
வாயோடு எற்று விடு
அச்சய பாாத்திரத்தை
பிச்சை எடுக்க வைத்து விடு
வாழா வெட்டியாய்
காவேரி வந்து நிற்ப்பாள்
வரவேற்க்க வாசல் வா
விழாத அறிவியாய்
வெறும் பாறையாய்
நிற்கட்டும் ஒக்கனேகல்.....

வறண்ட பூமியாய் தஞ்சை மண்
புழுதி பறக்கும் தம்மா
புகழை இழக்கும்  கல்லனை
பாழான நத்தை வீடு
பட்டினி போடும் நெல்வயல்
எலி கறிக்கு ஏங்கும் வயிறு
கஞ்சி தொட்டி திறக்கும் அவலம்!
போராட்டம் இல்லாத
உண்ணா விரதம்
தேரோட்டம் இல்லாத
திருவாரூர் தேர்
கண்ணிர் சிந்திய விவசாயி
வெறும் கையோடு வராதே
கொள்ளி போட குச்சி யோடு வா....
போராட இரெத்தம் இல்லை
வாளேந்த வாய்ப்பு இல்லை
தமிழா நீ தூங்கு - உன்
குரட்டை சத்தம்
எதிரியின்  காதுகளில் கேட்கட்டும்
உன் சந்ததிகள்
உணவுக்கு கையேந்தட்டும்
சேதாரம் ஆழுது சிறு குடல்
ஆகாரம் இல்லை பறவை கூட்டம்
அழும் குரல்

குடி நீருக்காக
கொலை நடுங்க வைக்கும்
மூன்றாம் போர் இங்கே தான்
ஆரம்பம்
தமிழா...உடன் பிறப்பே
நீ மட்டும் தூங்கு
தூங்கிக் கொண்டே இரு....

Comments

Popular posts from this blog

மரம் கவிதை

tearful words of a Gaza child