சாவு மணி அடிக்க வா.....
சாவு மணி அடிக்க வா...
பற்றி எரியுதடா
பாழும் வயிற்று இங்கே
கொட்டி திர்க்குதடா
நிந்தும் கண்கள் இங்கே
வேட்டி எறிந்திடவா
சாதிகளின் வேரை
தட்டி கேட்டிடவா
நாதியற்ற ரூட்டை
சாதிக்கு சாவுமணி அடித்திடுவேன்டும்
பவிக்கு பரலோகம் காட்டிடுவோம்
காகித கப்பலில்
பயனம் தவிர்ப்போம்
கடவுளே வந்தாலும்
கோள்ளி கேட்போம்
படிப்பில் எற்ற தாழ்வை
ஏன் வைத்தாய்??
பிறப்பில் வஞ்சகம்
ஏன் செய்தாய்??
வளைந்து குனிந்த வாழ்வுதனை
நிமிர்ந்து நிற்க செய்வாயோ
பயந்து பயந்து போசும் எம்மை
மடையை திரந்த வெள்ளம் போல்
போச வைப்பாபோ
சட்டசபை கூட்டினாலும் -எம்
சத்தம் அங்கே கேட்ட வேன்டும்
சந்தியிலே பேசினாலும்-எம்
சங்கதி தான் உயர வேன்டும்
ஆழுது ஆழுது சோர்வடைந்த
என் குல தாய்களூக்கு
வீதி தோறும் மரியாதை வேண்டும்
கத்தி முனையில்
களவாடிய உரிமை
பந்தி இலையில் சமமாக வேண்டும்
சீவனை பார்க்க நந்தனார்க்கு
விலகி நின்ற நந்தியே போல
எமனையே பார்தாலும்
நோரிலே பார்க்க வேண்டும்
வரத்தை வாரி தா கடவுளே!!
இல்லையேல்....
எமது சேரியில் பிறந்து வா ஒருமுரை
நாதன்
Comments
Post a Comment