நடைபாதை பூக்கள்

நடைபாதை பூக்கள் 

தாயின் மடியில் சுமந்து
பூமி தாயின் மடியில்
தத்து தாயின் மடியில்
தத்து கொடுத்து விட்டாள்
வெயில் அடித்தாலும்
மழை அடித்தாலும் 
நடைபாதை தான் எங்கள் வீடு
வாகனத்தின் ஒலியின்
இசை ரசித்து கொண்டே
தூங்குவோம் 
எங்களை தினம்தினம் விசாரிக்க
வரும் ஒரே நண்பன்
கொசு!!!!!

சில நேரம் பிச்சை
 எடுப்போம்
சில நேரம் உண்ணா விரதம்
இருப்போம்
கடவுளை கண்டதில்லை
கருனையோடு
உணவு பொட்டலம் தருபவர் தான்
அன்ரைய கடவுளாய் 
நினைப்போம்
பள்ளிகூடம் போனதில்லை
வாழ்க்கை கல்வியை
நடைபாதையிலே
தினம் தினம் படிப்போம்

சாலையில் செல்லும் வாகனம்
எங்கள் உயிரை குடித்தாலும்
எதிர்ப்பு இன்றி ஏற்று கொள்வோம்
அழுகை வந்தால்
மழையிலே அழுவோம்
கண்ணிர் கூட யாருக்கும் தெரியாது
பழைய சாட்டை யார் தந்தாலும்
புதிய சட்டையாய் போட்டு
 கொள்வோம்
அன்ன தானம் என்றால்
அலாதி பிரியம்
கட்சி கூட்டம் என்றால்
பனமும் பிரியாணியும் இலவசம்
ரேசன் கார்டு இல்லாத
இந்தியாவின் குடிமகன்
ஆதார் இல்லாத
ஆண்டவனின் குழந்தை!!
பழைய சோறுதான்
எங்கள் கனவு
வாழும் வரை நடைபாதை -உயிர்
போன பின்பு குப்பை தொட்டி!!
முன் மாதிரி பட்டினத்தார்
பின் மாதிரி பட்டணத்தார்

Comments

Popular posts from this blog

மரம் கவிதை

tearful words of a Gaza child