பாதையற்ற பாடைகள்
பாதையற்ற பாதைகளுக்கு
பதில் செல்ல யார் வருவான்
படைத்து விட்ட பிரம்மனுக்கு
அழிந்து விட்ட கடவுக்கும்
இந்த நிலை தெரியுமா
சேரக்குள் வீதி உலாவராத
கடவுளுக்கு
இந்த சேதி மட்டும் எப்படி தெரியும்
நான்கு எறும்புகள் கூட
செத்து போன சிலந்திககு
பாடைகட்டி ஆலயத்திலே
வலம் வருகிறது
ஆண்மாவை மட்டும்
௭டுத்து செல்லும் இறைவன்
அவரை சுமந்த உடல் இருக்கும்
படையை எடுத்து செல்ல
வழி சொல்லுங்கள்
இல்லையேல்
ஆன்மாவோடு உடலையும்
எடுத்து கொல்லுங்கள்
குளித்த உடலை
ஆற்றுக்குள் இறக்கி
எடுத்து செல்லும் போது
மீண்டும் குளிக்க வைத்து
சமக்க வைத்து மகான்களே
ரொம்ப நன்றி
பெரியாரின் பேரை சொல்லும்
பெரியோர்களே!!!
ஆட்சிக்கு வந்த அன்பு உள்ளங்களே
வாழ்வு முடிந்து
நடைகட்டி போகும் மணிதன்
பாடைக் காவது வழி செல்லுங்கள்
நாதன் கவிதைகள்
Comments
Post a Comment