கடல்

கடல்

அலை ஆடும் கரையேரம் 
விளையாடும் என் உயிரே-- நீ
கரையேரி வந்தாலோ
கதை முடியும் என் உயிரே
கடலுக்குள் இரவெல்லாம்
வளைப்போட்டு காத்திருப்போம்
அகப்பட்டால் மீன்ப் பிடித்து
விடியும்போது கரை ஏறுவோம்
மழை பெயிதால் மறைந்துக்கெள்ள
கட்டுமரத்தில் முடியாது
புயல் வந்தால் புலம்பெயற
புதிய பாதை கிடையாது

மீன் பிடிக்கு எங்கலுக்கு
கடலே நீ தாயம்மா!!
மீதம் ஆகும் கழிவுகளை 
ஏற்றுக் கொள்ளூம் கூவம்மா!!
பனி மழைகள் உறுகுவதால் -நீ
படிதாண்டும் பெண்ணம்மா!!
சுனாமி என்னும் பெயரினிலே -உயிரை
சுருட்டி போகும் கடலம்மா 
கரையில் இருந்து பார்க்கும்போது
நீ கூட ஆழகம்மா!!
ஏறி இறங்கி வளையாடும்
உண் அழைக்கூடச் சருக்கம்மா!!!
திரை கடல் ஓவியமே 
திரவ நிலை உப்பளமே 
மீன்கள் வாழும் தாயகமே 
ஆவியாகும் காற்று மேகமே!!

நாதன் 

Comments

Popular posts from this blog

மரம் கவிதை

tearful words of a Gaza child