விவசாயி கவிதை

விவசாயி கவிதை 

கம்மாயில தண்ணி
கரம்ப அல்ல இல்லை,ஆளும் இல்லை
கரையும் தூந்து போச்சிதையா!
என் கண்ணும் வெள்ளை எடுத்து ஆனதையாய் 
துளி கட்டி தூங்கவைச்ச
புன்னமரம் காணவில்லை
ஐம்பது வயசாச்சி துக்கம் கூட வருவதில்லை
வடக்கத்தி மழை பெஞ்சும்
வாயக்காலில் தண்ணி வரல
அறல செடி அடைச்சி நிக்க
அள்ளி போட முடியவில்லை

கம்மங் கஞ்சி காய்க்க
படிச்ச புள்ள மட்டேங்குது
நரம்பு தளர்ந்து போக
ஹார்லிசா மாறிவருது!!
விதை விதைக்க விதையுமில்ல
கவருமண்டோ!!!!
மர பணூவ மாத்தி தருது
பழத்துக்குள்ள கொட்டை இல்லை
என் பேரனுக்கும் பிள்ளை இல்லை
காக்கா குருவி இல்லை
காரு வண்டி பறக்குதையா!!
மீத்தேன் காத்து எடுக்க
மிரள மிரள பாக்குதையா
பச்சை பயிர் அழிச்சி
பாவி பய தொழ போட்டான்
கஞ்சிக்கு வழியின்றி
வெளி நாட்டில் கை ஏந்திரான்
படிக்க பட்டணம் போறான்
அங்கேயே படுத்துகிறான்
தாய் நிலத்தில்!!
ஏர் பிடிக்க ஆளும் இல்ல
எழந்து நடக்க முடியவில்ல
ஊர் ஆழுத பின்னும் கூட
வயலை தருசாக்கி 
தாய் நிலத்த மலடாக்கி
சூட்டு போட்ட எவனுக்கோ
தார வார்த்து விட்டேனம்மா
போற நேரம் நெருங்கு தையா
தூக்கி போட ஆளு இல்ல
போன பின்னே ஆழுது எதற்க்கு
இத்த கட்ட வேகதம்மா!!!!

நாதன் 

Comments

Popular posts from this blog

மரம் கவிதை

tearful words of a Gaza child