பூமி தாய் சாக கிடக்கிறாள்

பூமி தாய் சாக கிடக்கிறாள்
பூமிதாய் சாக கிடக்கிறாள்
காப்பாற்ற கை  கொடுக்க வா!!
பால் போன்ற ஆற்று நீர்
பாழாகி கடக்க
பட்டு மெத்தை தூக்கம் எதற்க்கு?
பூமி தாயை பிழந்து
எரிவாயு போகிறது
தலைக்கு மேலே
மின் தட கம்பி
இரண்டும் நடுவே
பூமிதாய் வெந்து சாகிறாள்
சோறு இடும் நிலத்தை
ரோடு இடும் நிலை எதற்க்கு?
பூமித்தாயின்  இரத்தத்தை உறிஞ்சி
மீத்தேன் விற்பனையா?
வீடுகட்ட அழித்தது போக
மிச்சம் இருப்பது
கொஞ்ச உயிர் தூணடா 
அதையும் 
ஆலைகட்டி ,தாயின்
காலைகட்டி போகிறிக்களே!

புமி தூயின் கருவரையில்
பிறந்தோனம் 
பூமி தாயின் கையிலே
தவழ்ந்தோம்
பூமி தாயின் மடியிலே
மடிந்து போவோம்
நீ யாருடா குறுக்க இங்கே!
பூமிதாய் எனது தாய்
கலப்பையால் வகிடெடுத்து
கால்வாயால் நீர் கொடுத்து
விதைகளளால் உணவிட்டு
கள வெட்டியால் களைபறித்து
தினம் தினம் பாதுகாத்தேன்
அதற்க்கா அவள் தந்தாள்
வயிரு குளிர உணவு -இன்று
அவளுக்கு வாய்களிசி போட
நீர் யாருடா?
வெட்ட வெயிலிலே
நீர் பாய்த்தூயா
கெட்டும் மழையிலே
மடை திறந்தாயா?
இமைகள் தூங்காமல்
என் தாய் மண்ணை பாதுகாத்தாயா?

பிறகு எதற்க்கடா
என் தாய் மண்ணை
உனக்கு தர வேன்டும்
வெள்ளை சட்டையும் 
குளிர்சாதன பெட்டியுமாய்
வலம் வரும் உனக்கு
என் பூமி தாயின் பெருமை 
எப்படி தெரியும்
கோட்டையில் இருப்பவரே
சேற்றினில் கை வைத்துபார்
பழைய சோறும்
பஞ்சாமிர்தமாய் இருக்கும்
இணியும் என் பூமிதாயை 
சாகடிக்க நினைக்கபாயா?
வேண்டாம் ஐயா வேண்டாம்!!!!

Comments

Popular posts from this blog

மரம் கவிதை

tearful words of a Gaza child