வயிற்றுக்கு லாக்டொன்
அம்மா சுட்ட தோசை போல
வானத்தில் வட்ட நிலா
ஆசை பட்டு புட்டு திங்க
எட்டலியே அந்த நிலா
தெரு ஓரம் வீடு என்று
தினம் தோறும் படுத்து வந்தோம்
மழை மேகம் அழுது விட்டால்
தாழ்வாரம் தேடி நிற்போம்
பாழும் வயிறுசீபசிக்குதம்மா
கைகளை எந்தி நிற்கும்மா
கடவுளே எதிரே வந்தாலும்
கஞ்சி தான் வேண்டும் என் பேன் அம்மா
வாரி சுருட்டி வைபோரே
ஒரு வாய் கஞ்சி கொடுபிரா
ஓலை குடிசை ஒரத்திலே
ஒதுங்க இடம் தருவிரா
கொசுக்களுக்கு உணவுதர
கூவம் அருகில் படுத்திருப்போம்
எங்களூக்கு உணவுதர கடவுளாய் உங்களை தேடுகிரோம்!!!
ஐந்து அப்பத்தை
ஐயாயிரம் பெருக்கு
கொடுத்த கடவுளே!!
எங்கள் பாசி திர்க்க
இங்கே வருவிரா??
நாதன்
Comments
Post a Comment