பள்ளி கூடம்
பள்ளி கூடம் என் கனவுகளின் கோட்டை
எனக்கு என்று சிம்மாசனம்
தந்த சட்டசபை
என்னை சித்தனாய் திட்டிய
அறிவு களஞ்சியம்
என்னை புத்தனாய் மாற்றிய போதி மரம்
என் தவறுகளை மன்னித்த
தேவ ஆலயம்
சிறு தண்னையால் புடமிட்பட்ட
தங்கப் பட்டரை
என் கண்ணீருக்கு ஆருதல் சொன்ன
அன்பகம்
உயிர் நண்பலை எனக்கு ஆளித்த
நட்பு கடல்
விழுந்து போதெல்லாம்
எழுந்து வா வா என்று முழக்கமிட்ட
வந்தே மாதரம்
தன்னம்பிக்கை ஊட்டிய
தாயின் இல்லம்
என் பெற்றோர் சொல்லி தாராத
வார்த்தையையும் ,வாழ்க்கையையும்
சொல்லி தந்தது பள்ளிகூடம்
Comments
Post a Comment