காசா குழந்தையின் கண்ணிர் குரல்

காசா குழந்தையின் கண்ணிர் குரல்

அம்மா உன்னை தேடிகிறேன்
ஆசை முகத்தை காட்டி விடு 
குண்டு மழை வெள்ளத்திலே -நீ
ஆடித்து செல்லப்பட்டாயோ!! -இல்லை
இடிந்துப்போன வீட்டுக்குள்ளே
உடைந்து போய் தூங்கிறாயோ!!
அம்மா  உன்னை தேடிகிறேன்
ஒரு முறை உன் முகத்தை காட்டிவிடு

காசா பணமா தேவை இல்லை
நீ மட்டும் போதும் அம்மா
கண்ணிர் வற்றி போன பின்பு
கண்கள் துடைக்க வருவாயோ!!
கடவுளுக்குள் சண்டை இல்லை
மணிதணின் சண்டையில் 
உன்னை காணவில்லை!!
பால் சோற்றை பாசத்தோடு தருவாயே
ரெட்டி துண்டுக்கு 
ஏன் என்னை அலைய வைத்தாய் 
அம்மா உன்னை தேடுகிறேன் 
உம் அன்பு முகத்தை காட்டிவிடு


துப்பாக்கிக்கு தெரியவில்லை
உன் உயியின் விலை 
உன் இதயத்தைப் பார்த்தால் தெரியும்
பாசத்தின் கலை
நீ சொல்லாத எந்த வார்தையும் 
இரக்கம் இன்றி கேட்கிறதே
அம்மா உன் அரவணைப்பில்
அச்சம் இன்றி வாழ்திருந்தேன்- உன்னை
ஆண்டவன் இன்று ஆழத்தானோ
மிச்சம் நான் மட்டும்
இங்கே இருந்து எதற்க்கு??
கடவுளுகள் வாழ்ந்த புமி எல்லாம் -இன்று
கலவர பூமி ஆகுதம்மா!!
கத்தி முனை வார்த்தை எல்லாம்
கச்சேரி நடத்துதம்மா!!

கடவுள்களே நீங்கள்
கருனை உள்ள தெய்வாமே
நீங்களும் உங்கள் அம்மாவை 
தொலைத்தால் என்ன செய்வீர்??
ஆனாதையாய் அழுகிறேன் 
பீரங்கிகளுக்கு தெரியுமா 
என் அழுகுரலின் பாசை ?
நேற்று வரை அம்மா உன் மடியில் இருந்தேன் 
இன்றோ குப்பை தொட்டி அருகில்
பசிக்கிறதே அம்மா- உன் 
பால் சோறும் நீயும் எங்கே?
இதையம் இல்லா இரும்பு
 மனிதரின் குண்டுகலுக்கு
உன் உயிரை இரவல் கொடுத்தாயோ!!
உதயமாகும்  நேரத்தில் 
உன் குழந்தை
உன்னை தேடும் என்பதை நீ மறந்தாயோ!
அம்மா நீ எங்கே இருக்கிறாய்
என்னை அங்கே அழத்துசெல்வாயா
நீ இல்லாத இந்த உலகம்
சுடுகாடாய்தெரிகிறதே

நிலவு போன்ற உன் முகத்தை
இரவெல்லாம் பார்ப்பேன் -இன்று
நிலவை மட்டுமே பார்க்கிறேன்
பாலை வனத்தில்
 கண்ணீர் மழை தோன்றி 
காசா குன்றில் ஆறாய் ஓடுதம்மா 
எத்தனையோ அம்மாவை காணவில்லை
இன்னுமா உயிர் பசி அடங்கவில்லை
அம்மா இன்றி கதரும் எங்கலுக்கு
ஆண்டவனே உங்களுக்கு
அம்மா இருந்தால்
அதையாவது எங்களுக்கு 
அனுப்பி வையுங்கள்
அம்மா உன்னை தேடிகிரேன் 
உயிர் இல்லா உன்னை 
இரக்கம் அற்ற இதையங்களில்

Comments

Popular posts from this blog

மரம் கவிதை

tearful words of a Gaza child