கடலும் கரையும் விற்பனைக்கு

கடலும் கரையும் விற்பனைக்கு

கடல் அலையில்
கால் பதித்து
விலையாடினோம்
மணல் வீடு கட்டி
மனப் பாடு பாடினோம்
மீன் பிடித்த வலையையும்
உலர்ந்தினோம்
மீன்கள் கூறு கடடி
கை நிறைய காசுபார்த்தோம்

கருவாடு காய காய 
எங்கள் வயிரு
காயாமல் பார்த்து கொண்டோம்
நிலா வெளிச்சத்தில்
துண்டு விரித்து தூங்கினோம்
உண்போம் உறங்கினோம்
பிள்ளையும் பெற்றோம்
கடற்கரை மண்ணிலே - இன்று
எங்களை கேளாமல்
கடலையும் கரையையும்
விற்று விடடிர்

கரையிலே சுவர் எழுப்பி
எங்கள் கனவுகளை 
குட்டிச்சுவராய் ஆக்கிவிட்டார்
நாதியற்ற எம்மை
அலையாத்தி காடுகளை போல்
அனாதை ஆக்கிவிட்டார்
கடவுளே!!!!!!!!
இந்த பூமியில் கடலையும்
 கரையையும் விற்றவர்
எம்மை மட்டும் விட்டு விட்டார் நன்றி 

Comments

Popular posts from this blog

மரம் கவிதை

tearful words of a Gaza child