நெருப்பு மழை கவிதை

நெருப்பு மழை

நெருப்பு மழையில் நினைந்த பின்னே
நெஞ்சில் ஓர் நெருடல் கண்டேன்!
கறுப்பு உடலின் கதறல் கூட
கவிதை என்றே சொல்லி அழுதேன்
சேரி என்னும் சேருக்குள்ளே
நாங்கள் கூட தாமரை தான்!!
வாரி அணைக்க யாரும் இல்லை
வாடி போக தாமதம்தான்!!
ஒடி ஆடும் வயதில் கூட
ஓரம் கட்டி பார்ப்பாயோ
மாடி வீடு மதிலும் கூட
காரம் கொட்டி பார்க்கிறதே!!

 சிலுவையிலே அறைந்த போதும்
அழ முடியா சாதியம்மா
அழுது அழுது அனைகட்ட
கை கழுவி போனாரம்மா
துரத்தில் தெரிந்த வெளிச்சம் -என்
விட்டருகே சீக்கிரமாய் வருமா
என் பேரப் பிள்ளை காலத்திலாவது
சாதி தீ அணைந்திடுமா

நாதன் 

Comments

Popular posts from this blog

மரம் கவிதை

tearful words of a Gaza child