ஸ்டெர்லைட்டில் அணைந்த போன விளக்கு

ஸ்டெர்லைட்டில் அணைந்து 
போன விளக்கு!!

மேகம் காத்தடிக்க 
மின்னல் கூத்தடிக்க
தூரல் தூவானமாய்
தூக்கி வந்து தூரலிட
ஊசலாடிய இதயத்தோடு
உப்பளத்திற்க்கு 
உடைந்து போன மிதிவண்டியில்
ஓடி வந்தான்
வெல்வதற்க்குல் 
கூடம் கண்டு
வாய் பார்த்து நின்று விட்டான்
அள்ளி குதித்து வரும்
அலைப் போல
துள்ளி குதித்துவரும் 
கூட்டத்தை கண்டாண்


காக்கி சட்டைகளும்
பாதுகாப்பாய் வந்திறங்க
யார்கண்பட்டிசோ தெரியவில்லை
கண்மூடி திறக்கும் முன்னே 
நடந்துவிட்டது
துப்பாக்கி குண்டுக்கு 
தெரியவில்லை
வேடிக்கை பாத்தவர் என்று

சிகப்பு கொண்டை விளக்கு ஊர்தி
அள்ளி போட்டு சென்றது
மழை கொட்டி அழுதது
உப்பளமே கரைந்து போக
கருக்கல் ஆனது
கருப்பாயி எட்டிார்ததால்
கல்யாணம் ஆகி மூன்று மாதம்
சாட்சி வயிற்றில்
பின அரையில் தூங்கியவனை
கண்ணீரின் கதறலிலே
தட்டி எழுப்பினாள் முடியவில்லை
முடிந்தது போனது எல்லாம்
தூத்துக்குடியில் இன்னும் கடல்
அது கருப்பாயின் கண்களில்

மன்னனிடம் 
கண்ணகிக்காவது நீதி கேட்க
கால் சிலம்பு இருந்து
கருப்பாயிக்கு என்ன இருக்கிறது
நீதி கேட்டு எந்த மன்னனிடம்
செல்வதற்க்கு...?

Comments

Popular posts from this blog

மரம் கவிதை

tearful words of a Gaza child