சுனாமி பெண்
சுனாமி பெண்
கடல் அலையில்
கரைந்து போனது -அவளின்
கண்ணிர் துளிகள்
வருடங்கள்
உருண்டு ஓடியது
பிதினாறு முடிந்தது
பதினெழு ஆனது
நினைவுகள் மட்டும் - நெஞ்சில்
நின்று கொண்டே அழுகிறது
பொழுது விடிந்தால்
கடவுளின் பிறந்த நாள்
கடற்கரை கோவிலில்
விளக்குகளின் திருவிழா
மாலை நேரம்
காற்று வாங்க
கடற்கரைக்கு சென்றால் அம்மா
என்னை மட்டும் பாட்டியிடம்
விட்டு விட்டால்
அசைந்தாடும்
அலைகளில் -கால்களை
நனைந்தாட எத்தனை ஆசை
அம்மாவின் மேல் கோபம்
சற்று நேரத்தில்
ஆலறல் சத்தம்
பனை உயர அலைகள்
கரையில் உள்ளவர்களை
வாரி சுருட்டியது
அம்மா உன்னை
இங்குதானே தொலைத்தேன்
கடல் அலையில்
கரைந்து போனது -அவளின்
கண்ணிர் துளிகள்
நாதன்
Comments
Post a Comment