கொலைகாரக் கொரனா #கவிதை
கொலைகார கொரனா கவிதை
கொலை வெறி ௨னக்கெதற்க்கு -நீ
மலை ஏறும் நாள் வரைக்கும்
படி தாண்ட மாட்டேன் நான்
போருக்கு போனாலும்
கவசமின்றி போகும் எம்மை
முகத்துக்கே கவசம் போட வைத்து விட்டாயே!!
வெயிலோடு வினையாடி
வீதி எல்லாம் உறவாடிய எம்மை
வீட்டுக்குள்ளே சிறை வைத்தாய்!பள்ளி கூடம் மறந்து போக
புத்தகம் தொலைந்து போக
கொள்ளி குடம் தூக்க வைத்து
கொலை காரன் ஆனாயே!!
வேலைக்கு விடுமுறை தந்தாய்
கூலி இல்லை
வாயிற்க்கு விடுமுறை தந்தாய்
உணவு இல்லை!!
வீதிக்கு விடுமுறை தந்தாய்
உறக்கம் இல்லை!!
தேதிக்கு வீடுமுரை தந்தாய்
உயிரும் இல்லை!!
இத்தனை கொலை வெறி உனக் கெதற்க்கு??
திருமணத் தேதி தள்ளி வைத்தாய்!
தேடிய வாழ்க்கைக்கும் கொள்ளி வைத்தாய்!
குழந்தையின் பெற்றோரை இழக்க வைத்தாய்!
அனாதையாய் வீதியில்
அலைய வைத்தாய்!!
இத்தனை கொலை வெறி உனக் கெதற்க்கு??
நெஞ்சில் ஓர் இரக்கமின்றி
நித்தம் உனக்கு உயர் பசியா??
கண்ணி்ல் நீர் சுரக்கும் முன்னே
காக்கும் கடவுள் காணவில்லையோ?
நாதன்
Comments
Post a Comment